அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதித்த காங்கிரஸ் கட்சியை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்பி ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள மாவட்ட மைய நூலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உருவ படத்தை துடைப்பத்தை கொண்டு அடித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.. அதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை உருவ படத்தை தீயிட்டு கொளுத்த அதிமுகவினர் முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து அதிமுகவினரை கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சுரேஷ்குமார், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனா பேகம் மீரான், மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர்.