திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் கரூர் மாவட்டத்தில் தாவேக் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் அதேபோல் பணியின் போது உயிரிழந்த மாநகராட்சி ஊழியர்கள் இருவர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டம் தொடங்கியதும் திருச்சி 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பேசுகையில்:- திருச்சி டபிள்யூபி. ரோடு பகுதியில் வடிகால் பாலம் போடப்படாமல் உள்ளது. அதனை தூர்வார வேண்டும். மேலும் குறிப்பாக பர்மா பஜாரில் உள்ள 95 தரைக்கடை வியாபாரிகளுக்கு யானை குளத்தில் 95 எண்ணிக்கையில் ஒரே அளவில் கடைகள் அமைத்துக் கொடுப்பதாக. இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்.எஸ்.பி சாலையில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு எங்கே இடம் ஒதுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து மேயர் அன்பழகன் பேசுகையில்:- அதிகாரிகளுடன் கலந்து பேசி யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஜெய நிர்மலா,துணை ஆணையர் பாலு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.