திருச்சி 59 வது வார்டு கல்லுக்குழி இலுப்பூர் ரோடு பகுதியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025 2026 ஆம் ஆண்டுக்கான ரூபாய் 17 லட்சம் செலவில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம் பி துரை வைகோ மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோயில் ராஜ் ஆகியோர் நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர்.
இதேபோல் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் வார்டு எண் 30 வரவுனேரி முஸ்லிம் தெருவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டியை திருச்சி எம்பி துரை வைகோ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரொக்கையா, திமுக மாநகர செயலாளர் மதிவாணன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லவண்டி சோமு, திமுக நிர்வாகி டயா மற்றும் அரசு அதிகாரிகள் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.