சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு சென்றார்.அங்கு திருச்சி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து நிர்வாகிகளுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என கேட்டறிந்தார். பின்னர், தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, செந்தரபாண்டியன், கதிரவன், ஸ்டாலின் குமார்,மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,மத்திய மாவட்டம் முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,அந்த நல்லூர் முன்னாள் சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.