டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையின் மூலம் முதன்முறையாக மருத்துவர் கே.சாந்தா தங்கப் பதக்கம் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் . மருது பாண்டியன் மற்றும் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் ஜமீர் பாஷா மற்றும் மூத்த ஆலோசகர், HCG புற்றுநோய் மையம், அகமதாபாத் தலைவர் – ABSI டாக்டர் விஜய் தேவநஹள்ளி ஆகியோர் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

முன்னதாக இந்த தேர்வு எழுதுவதற்கு 170 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். அதில் முதுகலை அறுவைசிகிச்சை நிபுணர்கள் (MS & DNB ) மற்றும் மார்பக அறுவைசிகிச்சை நிபுணர்கள் (M.Ch/Dr NB) உள்ளிட்ட 145 பேர் தேர்வு எழுதினர். இந்த பொது அறுவைசிகிச்சை பிரிவு தேர்வில் மும்பை கிராண்ட் கவர்மெண்ட் மெடிக்கல் காலேஜ் & SIR JI குரூப் ஆப் ஹாஸ்பிடல் DR.ராம் கிஷோர் முதலிடம் பிடித்தார். கவர்மெண்ட் தர்மபுரி மெடிக்கல் காலேஜ் DR.விக்னேஷ். இரண்டாம் இடம், அதேபோல் கவர்மெண்ட் விழுப்புரம் மெடிக்கல் காலேஜ் DR.பரத் மூன்றாம் இடத்தை பெற்றார்.

இதேபோல் சிறப்பு மருத்துவ பிரிவு தேர்வில் ஜெய்ப்பூர் நிம்ஸ் யூனிவர்சிட்டி DR.உமேஷ் முதலிடமும், மதுரை மெடிக்கல் காலேஜ் DR.அபினந்தா இரண்டாம் இடமும், தெலுங்கானா ஓஸ்மானா மெடிக்கல் காலேஜ் DR.ஹர்ஷினி மூன்றாம் இடத்தைப் பெற்றார். இந்த தேர்வின் முடிவில் ஆறு நபர்கள் வெற்றிபெற்றுள்ளனர், அவர்களுக்கு தங்க பதக்கமும் ரொக்க பரிசும் (மொத்தபரிசுத்தொகை 1,00,000/- ) வழங்கப்பட்டது.
