தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்தராமலிங்கத் தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் மாநில இணைப் பொருளாளர் சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன், மாநில மகளிர் அணி துணைத்தலைவர் புவனேஸ்வரி மற்றும் மாவட்ட மகளிர் தலைவி மலர்கொடி மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சேதுபதி, இளைஞர் அணி பொதுச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
