மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரில் காந்தி சிலை முன்பு அன்னை இந்திரா காந்தி அவர்களின் உருவப்படத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன் தலைமையில் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் மணப்பாறை சத்தியசீலன் சிவ சண்முகம் வையம்பட்டி செல்வம் ராதாகிருஷ்ணன் மருங்காபுரி குழந்தை தினேஷ் தமிழரசன் மாவட்ட நிர்வாகிகள் வீரபாண்டியன் வையம்பட்டி கோபால் குமார் சரோஜாதேவி பரணி சிறுபான்மை பிரிவு நஜீம் டைலர் பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
