மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்க பொதுச் செயலாளரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான அஷ்ரப் அலி தலைமையில் மனிதநேய வர்த்தக நலச் சங்க மாவட்ட தலைவர் கபீர் அகமது, மாவட்ட பொருளாளர் அன்சாரி. காசிம், சீனி பாண்டியன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் சரவணனிடம் இன்று மனு கொடுத்தனர். இதில் மனிதநேய வர்த்தகர் நலச்சங்கம் மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச் சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் படி நல்ல முறையில் இன்று வரை இயங்கி வருகிறது. சங்க நிர்வாகத்தின் கீழ் 6 கிளை சங்கங்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட சாலையோர சிறு வியாபாரிகள் உறுப்பினராக இருந்து வருகிறார்கள். திருச்சி கடைவீதி பகுதிகளான என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் ஆர்ச் உள்பகுதி, தெப்பக்குளம் தென்கரை, வாணப்பட்டறை ரோடு, சத்திரம் பஸ் நிலையம், இந்திரா காலேஜ் ரோடு இடதுபுற சாலையோரம், மேலப்புலி வார்டு ரோடு, காமராஜர் ஆர்ச் வளைவு இடதுபுற சாலையோரம் மற்றும் சிங்காரத்தோப்பு, பெரிய கடை வீதி பகுதிகளில் தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் கையில் வைத்து கர்ச்சிப் சாக்ஸ் துணிமணிகள், பனியன் ஜட்டிகள், பேன்சி பொருட்கள், உணவு பொருட்கள், செப்பல், ஸ்கூல் பேக் போன்ற ஏழை, நடுத்தர, பாமர மக்களுக்கு தேவைப்படும். அத்தியாவசிய பொருட்களை பாமர மக்கள் பயன்பெறும் வகையில் மிகவும் குறைந்த விலையில்

 கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறின்றி மத்திய மாநில அரசுகளின் சாலையோர சிறு வியாபாரிகள் தேசிய கொள்கை பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வியாபாரிகளுக்கு உரிய முறையில் மாநகராட்சி மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டு மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் வியாபாரிகள் வியாபாரம் செய்யும் இடங்களில் ஒழுங்குபடுத்தி கயிறு அடிக்கப்பட்டு அதன் உள்ளே கடை அமைக்கப்பட்டு வியாபாரம் செய்து மிகவும் குறைந்த விலைக்கு விற்று அதில் கிடைக்கும் சொற்ப லாபத்தை வைத்து எங்களுடைய சங்கஉறுப்பினர்கள் குடும்ப செலவு மற்றும் குழந்தைகள் மருத்துவ செலவு, கல்வி செலவு போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தரைக்கடை வியாபாரிகளை தற்போது வியாபாரம் செய்யும் இடங்களில் இருந்து அகற்றி மாற்று இடம் தரப் போவதாக தீபாவளிக்கு முந்தைய மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தகவல் வந்ததன் அடிப்படையில் வியாபாரிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு வழி இல்லாமல் வாழ்க்கை இழந்து விடுவோம் என்ற அச்சத்திலும், மனக்குழப்பத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். எனவே மாவட்ட கலெக்டர், நாங்கள் வியாபாரம் செய்யும் பகுதிகளிலே வியாபாரம் மண்டலங்களாக அறிவித்து வியாபாரிகள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியும்

ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்று இடம் தரும் பட்சத்தில் எங்கள் சங்க நிர்வாகிகள் உடனும் கலந்து ஆலோசித்த பின்பு எங்களுடைய சங்க உறுப்பினர்களான வியாபாரிகளுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள வியாபாரம் நடக்கக் கூடிய பகுதியான மாநகராட்சிக்கு சொந்தமான சிங்காரத்தோப்பு கடை வீதியில் உள்ள யானை குளம் என்று சொல்லக் கூடிய இடத்தில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கித் தர ஆவணம் செய்யுமாறும் எங்களுடைய சங்க உறுப்பினர்களான வியாபாரிகளுக்கு உரிய மாற்று இடம் தரும் வரை தற்போது வியாபாரம் செய்யும் பகுதிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறும் அதுவரை மாநகராட்சி நிர்வாகம் காவல்துறையினர் எங்கள் சங்க உறுப்பினர் கடைகளை அகற்ற எந்தவித நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தாங்கள் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்