திருச்சி மாவட்டம் , மத்திய பேருந்து நிலையம் அருகில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்றில் நிலைத்திட செய்திடும் வகையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் , அதில் ஒரு நூலகமும் 3000 சதுரமீட்டர் ( நிலத்தில் ரூபாய் 99.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது . நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பெருமைபடுத்தும் விதமாக அவருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் 1732 சதுர மீட்டர் நிலத்தில் ரூபாய் 43.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது . தமிழ்திரைப் படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் மிகச்சிறந்த கர்நாடக தமிழ் பாடகருமான எம்.கே.தியாகராஜ பாகவதர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் 1743 சதுரமீட்டர் நிலத்தில் ரூபாய் 42.69 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது .இந்த மூன்று மணிமண்டப பணிகளையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு , பணிகளை விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் . இந்த ஆய்வின் போது , மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் , முன்னாள் துணைமேயர் அன்பழகன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.