தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய வளைகோல் பந்து சங்கத்துடன் இணைந்து நடத்தும் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளது இதில் உலகில் உள்ள 24 அணிகள் பங்கேற்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஹாக்கி உலகக்கோப்பை வந்தடைந்து . அதனை அமைச்சர் கே.என். நேரு வரவேற்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஹாக்கி உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.இதில் பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
