திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதி mplads 2025-2026இன் கீழ் ரூபாய் 6,66,400 திட்ட மதிப்பீட்டில் வெளிப்புற இதயமுடுக்கியுடன் கூடிய டிஃபிபிரிலேட்டர், நிகழ்நேர CPR உடன் கூடிய வெளிப்புற இதயமுடுக்கியுடன் கூடிய டிஃபிபிரிலேட்டர். என்ற மருத்துவ உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மருத்துவ உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் மருத்துவமனையை ஆய்வு செய்து நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து திருவானைக்காவல் செக் போஸ்ட் ரவுண்டான அருகே திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் உள்ளூர் வளர்ச்சி நிதி 2025 2026-யில் இருந்து ரூ.15.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழல் குடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எம் பி துரை வைகோ கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, 5வது வார்டு கவுன்சிலர் முத்துக்குமார் நகராட்சி பொறியாளர் சிவபாதம்,நிர்வாக பொறியாளர் செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்
