சீர்மரபினர் நலசங்கத்தின் மாநில செயலாளர் காசிமாயர் தலைமையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு முத்திரையர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக1. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி வகுப்புவாரி தொகுப்பு இடஒதுக்கீடு தான் வழங்க வேண்டும். தனி சாதி வாரி இடஒதுக்கீடு வழங்க கூடாது. அவ்வாறு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தனி சாதிவாரி இடஒதுக்கீடு வழங்கபட்டால் சீர்மரபினர் நல சங்கத்தின் 68 சாதிகளின் சார்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த 47 சாதி சார்பாக சென்னையில் தற்கொலை போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
2. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ஓட்டு வங்கிக்கவும், வகுப்புவாரி தொகுப்பு இடஒதுக்கீடு வழங்காமல் தனி சாதிவாரி இடஒதுக்கீடு வழங்கியதால் தான் முன்னால் ஆளும் கட்சியாகிய அஇஅதிமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. தற்போது உள்ள மாநில அரசு சாதிவாரி இடஒதுக்கீடு கொடுக்காமல் வகுப்புவாரி தொகுப்பு இடஒதுக்கீட்டை கொடுக்கவில்லை என்றால் 5 கோடி மக்களின் அதிர்ப்தியை வருகின்ற உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் சந்திக்கின்ற சூழல் ஏற்படும்.
3. புள்ளி விபரம் சட்டம் 2008-ன் படி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்ததை போலவும், மேலும் மத்திய அரசின் அறிவுரைபடி சீர்மரபினர் மக்களின் சமூக பொருளாதார, குடும்ப கணக்கெடுப்பு-யும் ஒன்றினைத்து தமிழக முழுவதிலும் உள்ள அனைத்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாதியினரின் கல்விநிலை, வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டும் அனைத்து சாதி மக்களுக்கும் சமூக நீதி கிடைத்திட வகுப்புவாரி தொகுப்பு இடஒதுக்கீடு வழங்கிட மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களை வேண்டுகிறோம்.
4. வாக்கு வங்கிகாக தேர்தல் அறிவிப்புக்கு அரைமணி நேரத்திற்கு முன் கொண்டு வந்த சட்டப்படி செல்லாத சட்டமான 8/2021 சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் மாநில ஆலோசகர் Dr. பன்னீர்செல்வம், முத்திரையர் அரசியல் களம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா, கூத்தப்பார் கள்ளர் பேரவை ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், சீர்மரபினர் நலச்சங்கம் மாவட்ட செயலாளர் காசிமுருகன், தமிழ்நாடு முத்திரையர் சங்கம் மாநில துணைத்தலைவர் மதனா, கள்ளர் சமூகம் சார்லஸ் சாமி, தெலுங்குபட்டி செட்டியார் பேரவை கோவிந்தாராஜ், மறவர் சமூகம் மதுதேவர், கவுண்டர் குடும்ப நல சங்கம் சந்திரசேகரன், தமிழ்நாடு முத்திரையர் சங்க வக்கீல் சிவராஜ், தெலுங்குபட்டி செட்டியார் பேரவை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சிதம்பரம், தமிழ்நாடு முத்தரையர் சங்கம் பிரேம்குமார், தொட்டிய நாயகர் அரவிந்த்ராஜ், முத்திரையர் சங்க நிர்வாகிகள் காத்தான், தன்ட்ராஜ், சுபையா மற்றும் 118 சமூகத்தினர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் செய்திருந்தார்.