புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை அருகேயுள்ள பொத்தபட்டி அம்மன் கோவில் அருகில் சுமார் 15 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த காலியிடத்தை அப்பகுதி பொதுமக்கள் கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தி வந்தனர். இதனிடையே அதே ஊரை சேர்ந்த சுதாகர் (நகைகடை உரிமையாளர்) என்பவர் சமந்தபட்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.‌ இதுகுறித்து கோவில் பூசாரி ராசு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி வருவாய் துறை, போலீஸாரிடம் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதாகர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் இரும்பு பைப், ஆசி பெட்டாஸ் சீட்டுகளை கொண்டு முற்றிலும் தடுப்புகளை அமைத்து கொட்டகை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவில் பூசாரி ராசு நேற்று முன்தினம் மீண்டும் வருவாய்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அப்போது வருவாய் துறை அதிகாரிகள் கோவில் பூசாரி ராசுவை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த பூசாரி ராசு கொடும்பாலூரில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வருவாய் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த விராலிமலை போலீஸார், தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பூசாரி ராசு கீழே இறங்கி வந்தார்.தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றகோரி செல்போன் டவரில் ஏறிய 65 பெரியவரின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *