தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு வெட்ரன்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கார்கில் விஜய் திவாஸ் 1999ஆம் வருடம் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தை அனுசரித்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவஞ்சலி வீரவணக்கம் மரியாதை செலுத்தும் விதமாக திருச்சி வெஸ்ட்ரி ஸ்கூல் அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாணவர்கள் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கார்கில் போரில் பங்கேற்ற கேப்டன் கணேசன் அவர்கள் கார்கில் வரை அவரது பங்களிப்பு என்ன என்று சிறப்பாக எடுத்துரைத்தார். இதில் தலைவர் மூர்த்தி ஆனந்தன், செயலாளர் பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மற்றும் டாக்டர் பிரியா மகேஸ்வரி மற்றும் என்சிசி அணியில் இருந்தும் காவல் படையினரும், காவல்துறையின், திருச்சி மாநகர முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மாணவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக சங்கத்தின் மூலம் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தும் வந்திருந்த விருந்தாளிகளுக்கு சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.