திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை ஒன்றியம், மொண்டிப்பட்டியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில்… நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் சிவராசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மணப்பாறை அப்துல் சமத் திருச்சி கிழக்கு இனிக்கோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, துறையூர் ஸ்டாலின் குமார், துணை இயக்குனர் சுகாதார பணிகள் ராம் கணேஷ். மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மற்றும் மருத்துவர்கள், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.
உலகிலேயே முதல் முறையாக இத்தகைய திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. நோய் தொற்று பரவும் இந்தகாலக்கட்டத்தில், நோயாளிகளது வீடு தேடி சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள். முட நீக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தல், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல், தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய மருத்துவ சேவை, ‘தொற்றுநோய்’ (NCD) நோயாளிகளுக்கு தடுப்பூசி போடுதல், வயது முதிர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை செய்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.