ஒலிம்பிக் போட்டியில் 2-வது முறையாகத் தகுதி பெற்ற தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி லால்குடி அர்ஜுனா விருது பெற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஆரோக்கிய ராஜீவ், ஏற்கெனவே 3 முறை ஆசியப் போட்டிகளிலும், பலமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு அஅநடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, தற்போது 2-வது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆரோக்கியராஜ்,

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு முன்பை விட சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இருந்த போதும் இன்னும் கூடுதல் பயிற்சிகள் தேவைப்படுகிறது.சிறு சிறு தவறுகள் செய்ததால் எங்களால் பதக்கம் வெல்ல முடியவில்லை,அடுத்த முறை அந்த தவறுகளை சரி செய்து நிச்சயம் வெற்றி பெறுவோம்.

தடகள் போட்டியில் முதன் முறையாக இந்தியா தங்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அந்த தருணத்தில் நாங்கள் அங்கு இருந்தோம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

ஒலிம்பிக் போட்டியின் களம் என்பது வேறு மாதிரியாக உள்ளது.அது போன்ற களத்தில் விளையாட இந்தியாவில் நல்ல தரம் வாய்ந்த களமும்,பயிற்சியும் இன்னும் அதிகம் தேவையாக உள்ளது.

பயிற்சியின் போது எங்களுக்கான பிரேத்யேக உணவுக்கு கூடுதல் பணம் செலவாகிறது.அதற்கு அரசு உதவி செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.

முன்னதாக இவரை திருச்சி மாவட்ட தடகள சங்கம் செயலாளர் ராஜூ, பொருளாளர் ரவிசங்கர் ,மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம், ஆர்.கே.ராஜா,ஆரோக்கிய ராஜீவ்யின் பயிற்சியாளர் லால்குடி ராமசந்திரன், ஆரோக்கிய ராஜீவ் குடும்பத்தினர்கள் மற்றும் தடகள வீரர்கள் பலர் திருச்சி ரயில்வே நிலையத்தில் ஆரத்தி எடுத்து கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தது வரவேற்றார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *