திருச்சி உறையூர் லிங்கம் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு மற்றும் திருச்சி மாவட்ட மீன் வளத்துறை துணை இயக்குநர் சர்மிளா , உதவி இயக்குநர் ரம்யலெட்சுமி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு தீடீர் ஆய்வு மேற்கொண்டனர் .
இந்த ஆய்வில் 5 மொத்த விற்பனையாளர்களும் 9 சில்லறை கடைகளும் ஆக மொத்தம் 14 கடைகளும் 3 கன்டெய்னர் லாரிகளும் ஆய்வு செய்யப்பட்டதில் பார்மலின் ( Formalin ) தடவிய 350 கிலோ மீன்களும் , கெட்டுப்போன மீன்கள் 300 கிலோவும் ஆக மொத்தம் 650 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக ஊழியர்கள் மூலம் அழிக்கப்பட்டன . இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு கூறுகையில்
திருச்சி மாவட்டத்தில் மீன் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பார்மலின் தடவிய மீன்களையோ அல்லது கெட்டுப்போன மீன்களையோ விற்பனை செய்தால் இனிவருங்காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் . பொது மக்களும் இதுபோன்ற கெட்டுப்போன மீன்களோ அல்லது பார்மலின் தடவிய மீன்களோ கண்டறியப்பட்டால்
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது . புகார் எண்கள் : 99 44 95 95 95 9,95 85 95 95 95 மாநில புகார் எண் : 94 44 04 23 22 டாக்டர்.ரமேஷ்பாபு MBBS . , மாவட்ட நியமன அலுவலர் , உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை என தெரிவித்தார்.