தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போட்டிகள் ஹரியானாவில் உள்ள சிர்ஷா கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடந்தது. இதில் கிரிக்கெட் கபடி சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து மதுரை சேலம் திண்டுக்கல் தேனி திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 48 வீரர் வீராங்கனைகள் சென்றனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவு, 17 வயது உள்ளவர்களுக்கான பிரிவு 19 வயதினருக்கான பிரிவு மற்றும் 20 முதல் 25 வயது வரை உள்ள வீரர் வீராங்கனைகள் சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர்.
குறிப்பாக திருச்சி திருவரம்பூர் முருகையா சிலம்பம் கலை கூடத்தை சேர்ந்த 7 வீரர்கள். 8 வீராங்கனைகள் உள்ளிட்ட மொத்தம் 16 வீரர் வீராங்கனைகள் பயிற்சியாளர் வேல்முருகன் தலைமையில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையும் மற்றும் தனிப்பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று இன்று மதியம் பாலக்காடு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்து இறங்கினர். அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் சிலம்பகலை கூட சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பயிற்சியாளர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிலம்பம் கலை வீரர்களுக்கு அரசு துறையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால் எந்தத் துறையில் எந்தப் பிரிவினருக்கு எப்படி வேலை ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியிடவில்லை அதற்கா தமிழக முதல்வரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் மேலும் அவரிடம் சிலம்பம் சார்ந்த வீரர்களுக்கு உதவிகள் செய்து தர கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். அதே போல் 10 நாடுகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு அளித்தால் ஒலிம்பிக்கில் சிலம்ப போட்டியை இணைப்பதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது என தெரிவித்தார்.