சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவருபவர் சர்ச்சை சாமியார் சிவக்குமார், இவர் மதங்களையும், தெய்வங்களை அவமதித்து மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். மேலும் அனைத்து மத கடவுள்களை அவமதித்தது, பெண்களை ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 26.7.2021 அன்று அப்போதைய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அவர்களிடம், யோக குடில் சிவக்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு. சர்ச்சை சாமியார் சிவக்குமார் கைது செய்யப்பட்டு திருச்சி குற்றவியல் நடுவர் எண் 4 (JM4) முன்பாக நீதிமன்ற காவலுக்காக ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி குமார் அவர்கள் இ.த.ச பிரிவுகள் 153, 153A(i)(a), 295(A), 298, 504, 505(1)(b) , 505 (2) ஆகிய குற்றச் செயல்களுக்காக சிவக்குமாரை வருகிற 13.10.2021 வரை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து சர்ச்சை சாமியார் சிவக்குமாரை போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.