திருச்சி ராஜீவ் காந்தி நகர், விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வரா நகர், கணேசபுரம், நாகம்மை வீதி, மிலிட்டரி காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேறும் சகதியுமாக மோசமாக உள்ளதாகவும். அந்த பகுதிகளில் நாய்கள் அதிகமாக பெருகி உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அடிக்கடி கடித்து விடுவதாகவும். அப்பகுதிகளில் உள்ள சாக்கடைகள் வருடக்கணக்கில் தூர்வாரப்படாமல் இருப்பதால் கொசுக்கள் பெருகி டெங்கு உள்ளிட்ட நோயை ஏற்படுத்துவதாகவும். அப்பகுதிகளில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதாகவும் இதனால் வாகன ஓட்டிகள், முதியவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் இது சம்பந்தமாக ஏற்கனவே மகாத்மா காந்தி நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்
இன்று மேலகல்கண்டார் கோட்டையில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி பொதுநல சங்க செயலாளர் மோகன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மீண்டும் ஒரு கோரிக்கை மனுவை மாநகராட்சி அதிகாரியிடம் கொடுத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மாநகராட்சி அலுவலகத்தில் கருமாதி போராட்டம் நடைபெறும் என கூறினர். இந்தப் போராட்டத்தில் நல சங்கத்தின் தலைவர் முத்துராமலிங்கம், பொருளாளர் பஜிலத்கான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.