திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . அதன்படி , சரித்திர பதிவேடுகள் கொண்ட ரவுடிகள் , பழிவாங்கும் நோக்கத்தில் உள்ள ரவுடிகள் , செயின்பறிப்பு , வழிப்பறி செய்யும் எதிரிகள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு திருச்சி மாநகரில் குற்றச்சம்பவங்கள் குறைந்து வருகிறது . : மேலும் , கடந்த ஒரு மாத காலமாக திருச்சி மாநகரில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு ( L & O ) காவல்நிலையங்களில் உள்ள 100 வழக்குகளில் , 103 சரித்திரப்பதிவேடுகள் ( HS ) உடைய 188 ரவுடிகள் மற்றும் குற்றப்பரிவில் ( Crime ) உள்ள 23 வழக்குகளில் 13 சரித்திரப் பதிவேடுகள் ( HS ) உடைய 34 ரவுடிகளை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனின் உத்தரவு படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் , திருச்சி மாநகரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு , தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர்கள் என தெரிய வந்தவர்களை , அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கடந்த ஒரு மாத காலத்தில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் 4 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட்டதன் பேரில் மேற்படி 4 நபர்களுக்கும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி ஆணை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள் . மேலும் இவ்வருடத்தில் இதுவரை 42 நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.