3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும்,
மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும்
முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இந்நிலையில் 19-வது நாளாக இந்து விவசாயிகளுக்கும் இரண்டு மடங்கு லாபகாரமான விலை தருவதாக கூறி ஒரு கிலோ ரூபாய் 18 விற்ற நெல்லுக்கு ரூபாய் 36 சேர்த்து ரூபாய் 54 தருகிறேன் என கூறி விட்டு
வெறும் ரூபாய் 2 மட்டும் சேர்த்து ரூபாய் 20 கொடுக்கிறார், அதே போல ரூபாய் 2700 விற்ற ஒரு டன் கரும்புக்கு ரூபாய் 5400 சேர்த்து ரூபாய் 8100 தருகிறேன் என கூறி விட்டு வெறும் ரூபாய் 200 சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூபாய் 2900 கொடுத்து மோடி அய்யா இந்து விவசாயிகள் காதில் பூ சுற்றி விட்டார் என்பதற்காக இன்று விவசாயிகள் காதில் பூவை சுற்றி கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.