தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளோயீஸ் பெடரேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.‌ முன்னதாக மறைந்த தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் திருச்சி மண்டல நிர்வாகி சிவ செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.‌

இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பொதுச்செயலாளர் சேக்கிழார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். செயல் தலைவர் செல்வராஜ் பொருளாளர் லூர்து பாஸ்டின் ராஜ் அமைப்பு செயலாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக் குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மின்சார சட்டத் திருத்த மசோதா 2021 பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்யக் கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பிட தமிழ்நாடு முதலமைச்சரை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் 1-12-2019 முதல் வழங்கிட வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வாரியம் உடனே தொடங்கிட வேண்டும் எனவும், இடைக்கால நிவாரணமாக மாதம் ரூபாய் 3000 அனைவருக்கும் கணக்கிட்டு வழங்க வேண்டுடியும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரியும், மின்சார வாரியத்தில் பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரியும், 110kv துணை மின் நிலையத்திற்கு ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது உடனடியாக வழங்கிட கோரியும், மேட்டூர் பனிமலையில் செய்யப்படும் பணிகளுக்கு அவுட்சோர்சிங் செய்திடக் கூடாது என இப்பொதுக்குழு மின்சார வாரியத்தை கேட்டுக்கொள்கிறது. இந்த 3 நாள் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *