திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இல்லம் தேடிய கல்வி மையங்களின் சார்பில் பொங்கல் விழா போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா முத்தரசநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
நடைபெற்ற விழாவில் போட்டியில் தேர்வு பெற்ற மாணவ மாணவியருக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் இந்நிகழ்வில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோஸ்பின் நம்பிக்கை மேரி இடைநிலை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார் மருதநாயகம் வட்டார கல்வி அலுவலர் தலைமை உரை ஆற்றினார் ஸ்டான்லிராஜசேகர் வட்டார கல்வி அலுவலர் மீனா வட்டார மேற்பார்வையாளர் பொறுப்பு முன்னிலை வகித்தனர்.
போட்டியில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு மகேஷ் ஒன்றிய கவுன்சிலர் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி சுப்பிரமணியன் துணைத் தலைவர் ஆகியோர் பரிசு வழங்கினர் . முதலாம் வகுப்பு ஆசிரியர் லூமின் ஜார்ஜினா, இரண்டாம் வகுப்பு ஆசிரியர் கலைச்செல்வி மூன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜோஸ்பின் நம்பிக்கை மேரி நான்காம் வகுப்பு ஆசிரியர் மலர் விழியள், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் கலைச்செல்வி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் தன்னார்வலர்கள் கங்கவல்லி, பிரியா, சிவஹரிணி, ஷாலினி, கீர்த்தனா, அம்பிகா, இவாஞ்சலின்பெனிடா, சங்கீதா சாந்தினி அனுராதா வளர்மதி சங்கீதா லீலா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பெல் சிட்டா மேரி, இந்திரா,ஸ்ரீ வித்யா,ITK வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிகழ்ச்சியின் நன்றி உரையாக கலைச்செல்வி இடைநிலை ஆசிரியர் உரையாற்றினார் மேலும் இந்நிகழ்ச்சியின் போது மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளி கடைப்பிடித்து விழாவினை சிறப்பித்தனர்.