தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளான இன்று தைப்பொங்கலாகக் கொண்டாபட்டு வருகிறது.
இந்நாளன்று அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் காலையில் எழுந்து புதுப்பானையில் பொங்கலிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு உற்சாகமாக தைப் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல் வியாபார ஸ்தலங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டு இளம் பெண்கள் கும்மியடித்து நடனமாடி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடி வருகின்றனர்.