திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம் அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசுக்கு வழிகாட்டுதலின்படி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலெக்டர் சிவராசு தலைமை வைத்தார். திருச்சி எஸ்.பி.சுஜித்குமார், கோட்டாட்சியர் தவச்செல்வம், தாசில்தார் செல்வ கணேஷ்,பிடிஒக்கள் லலிதா,ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பச்சை கொடியை அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 ஜல்லிக்கட்டு காளைகள் 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள கொண்டனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போட்டியில் இறுதியாக அதிக மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்கள் இருக்கும் இருசக்கர வாகனம் டிவி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.