கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி திருச்சி வெஸ்டரி மேல்நிலைப்பள்ளியில் அரசு குளிர்சாதன பேருந்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு:-
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு மற்றும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட நிகழ்வுகள் புகைப் படங்கள் கண்காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள 6 நாட்கள் மாநகரம் மற்றும் புறநகரங்களில் நகரும் பேருந்துகளில் காட்சிப் படுத்தப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 23 பேர் உக்ரேனிற்கு சென்றதாக தகவல் பெறப் பட்டுயிருந்தது . அவர்களை மீட்டுத் தரக் கோரி பெற்றோர்கள் மனு அளித்து இருந்த நிலையில் 23 பேரும் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.