இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் அம்ரித் மகோத்சவ் பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக நடைபெற்ற போர்களில் இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும்பொருட்டு நம் பாரத பிரதமரின் நினைவு பரிசு 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் நாட்டிற்காக தன்னுயிர் நீத்த முதல் ராணுவ அதிகாரியாக திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் அவர்களின் குடும்ப உறுப்பினரான சகோதரி டாக்டர் சித்ரா செந்தில் குமார் அவர்களிடம் திருச்சி பெட்டாலியன் என்சிசி 2 கமாண்டிங் ஆபீஸர் ராம்நேக் கௌசாமி மற்றும் திருச்சி ஜோசப் கல்லூரி அசோசியேட் என்சிசி ஆபிஸர் அர்ம்ஸ்டராங் ஆகியோர் பாரத பிரதமரின் நினைவு பரிசை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மேஜர் சரவணன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு புனித வளனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.