Author: JB

ஊர் அடங்காதவர்களின் வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு , அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது . இருப்பினும் ,…

அரசு மருத்துவ மனையில் அமைச்சர் கே என் நேரு திடீர் ஆய்வு.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன நிலையில்,திருச்சியில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றால் பாதிக்கபடுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் அரசு மருத்துவமனையில்…

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த்.கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த். சட்டசபை தேர்தலிலும் கூட சுற்றுப் பயணம் மேற்கொண்ட விஜயகாந்த்,…

அதிகக் கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை.

திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக சிவராசு ஐஏஎஸ் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தற்போது திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இறப்பு விகிதத்தை குறைப்பது தான் முதல் பணியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம் மேலும் தினமும் 6…

ஊரடங்கினால் ரத்து, பொதுமக்கள் ஏமாற்றம்.

ஊரடங்கினால் ரத்து, பொதுமக்கள் ஏமாற்றம்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஊரடங்கின் காரணமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அங்குள்ள படகு இல்லம், தாவரவியல்…

திருச்சியில் இன்று 1271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 8164 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1271 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 877 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

ஊரடங்கில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய இளைஞர்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி…

நிவாரண பையில் உதயநிதி படம்-புதிய சர்ச்சை.

கொரோனா நிவாரணமாக தனது தொகுதியில் நிவாரண பொருட்களை உதயநிதி வழங்கிய நிலையில் அதில் அவரது புகைப்படம் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தமிழகம் முழுவதும்…

இனி வீடுகளில் நேரடி பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகதிருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும்…

இன்று சர்வதேச அருங்காட்சியக தினம்

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக…

இன்று முதல் 2- மணி நேரம் மட்டுமே இயங்கும் வங்கிகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10 மணி…

கொரோனாவால் இறந்த தாயின் உடலை சுடுகாடு வரை தூக்கி சென்ற மகன்

கொரோனா நோய் தோற்றல் உயிரிழந்த தாயின் சடலத்தை மகனே தனது தோளில் சுமந்தபடி இடுகாடு வரை தூக்கி சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் பாங்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர் சிங் என்பவரின் தாய்க்கு…

ஊரடங்கில் சாராயம் கடத்திய இருவர் கைது.

குடியாத்தம் அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது விற்பனைக்காக சாராயம் எடுத்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி கலெக்டராக மீண்டும் சிவராசு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்துதிருச்சி மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டார். மேலும்…

திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனாவுக்கு 15 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 7488 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1544 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 860 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…