திருச்சி ராம்ஜி நகர் அடுத்துள்ள கள்ளிக்குடி பகுதியில் உள்ள NR IAS அகடமி சார்பில் *வெற்றி நிச்சயம்* என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவருமான எழுச்சித் தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவுக்கு வருகை தந்து அவரை NR IAS அகடமியின் நிறுவனர் விஜயாலயன் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் மத்தியில் எம்பி திருமாவளவன் பேசுகையில்..
முதல் முறையாக நீண்ட வரவேற்புரையை இன்றைக்கு தான் கேட்டேன் வரவேற்புரை என்று சொல்வதை விட சிறப்புரை என்றே சொல்லலாம் இயக்குனர் விஜயாலயன் பேச்சு திறன் உள்ளவர் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன். தன்னால் அதிகாரியாக வர முடியாவிட்டாலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணி பெருமை அடைகிறேன்.
வெற்றி நிச்சயம் கூட்ட அரங்கில்
ஏதோ சிறு மாணவர்கள் இருப்பார்கள் சின்ன அரங்கத்தில் பேசப்போகிறோம் என்று வந்தேன் ஆனால் இங்கே பார்த்தால் ஒரு மாநாட்டை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அதிலும் பெரிய இன்ப அதிர்ச்சி என்னவென்றால் பாதிக்குமேல் பெண்கள் இருக்கிறீர்கள் சந்தேகம் வந்தது இவ்விடத்தில் பார்வையாளர் வந்திருக்கிறார்களா என்று கேட்டேன் இல்லை அனைவரும் மாணவர் என்று சொன்னதும் மெய்சிலிர்த்து போனேன்.
தேர்வுகளில் அதிக சதவீதம் பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் பெண்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது ஆண்களுக்கு நிகராக தற்போது கல்வி அளிக்கும் சூழல் அமைந்துள்ளது ஆண்களை மிஞ்சக் கூடிய வகையில் இது பெண்கள் கல்வி கற்கிறார்கள் மானுட சமூகமே வியந்து உள்ளது மாணவிகள் நிறைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.