எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார்.
முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக் கனி அவர்கள் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் NIA வின் அராஜக போக்கை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இமாம்.சாகுல் ஹமீது இன் ஆமி கண்டன உரையாற்றினார். மேலும் வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இளைஞர் அணி திருச்சி மாவட்ட பேராசிரியர் மைதீன் ,விம் மாவட்ட தலைவர் மூமீனா பேகம்,சுற்று சூழல் அணி தலைவர் SS.ரஹ்மதுல்லா, SDTU மாவட்ட துணைத் தலைவர் மீரான் மைதீன் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னகர்.ரபீக் ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினார்கள். இந்நிகழ்வை மாவட்ட செயலாளர் மதர். ஜமால் முகமது தொகுத்து வழங்கினார்கள்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி திருச்சி மாவட்ட அமைப்பு பொது செயலாளர் முகமது சித்திக்,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான்,மே 17 இயக்க திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன்,விம் மாநில செயற்குழு உறுப்பினர் மெஹராஜ் பானு,திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி,மேற்கு தொகுதி தலைவர் சிராஜ்,கிழக்கு தொகுதி தலைவர் அப்துல் காதர் ( பாபு),வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் A. அப்துல் மாலிக்,SDTU மாவட்ட பொருளாளர் சக்கரை மீரான், தொகுதி,வார்டு,கிளை,அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் பக்ருதீன் நன்றியுரையாற்றினார்.