கூடோ விளையாட்டுப் போட்டியில் 4வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி. நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கு பெற்றுள்ளனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவரும், பயிற்சியாளருமான கந்தமூர்த்தி:-
மும்பையில் மேமாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி பங்கேற்பது தொடர்பான ஆலோசனை, அதில் கலந்து கொள்ளும் வீரர் வீரானைங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற கருப்புபட்டைக்கான தேர்வுகளில் தகுதி பெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு கருப்புபட்டை வழங்கப்பட்டது.
மேலும், தேசிய நடுவர்கள் பயிற்சியாளர்களுக்கு உண்டான தகுதிப் பட்டையும் வழங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆப் இந்தியா (SGFI) போட்டிகளில் கூடோ போட்டியும் இணைக்க வேண்டும் என விளையாட்டுத் துறைக்கு கோரிக்கை வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அளவிலான 5வது பொதுக்குழு கூட்டம் மற்றும் 5வது மாநில அளவிலான போட்டிகளை மேற்கொள்வதற்கான கலந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.பேட்டின் போது மாநிலச் செயலாளர் சேக்முகமது உட்பட பலர் உடன் இருந்தனர்.