அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் டெல்லி சிவில் டிபன்ஸ் பெண் காவல்துறை அதிகாரிக்கு நீதி வேண்டியும், இந்தக் கொடும் செயலில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த தண்டனை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மகுது முன்னிலை வகித்தார்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் அ காஜா முஹையத்தீன் சிறப்பு அழைப்பாளராக பங்கு கொண்டு மாபெரும் கண்டன உரையை நிகழ்த்தினார். தமிழ் மாநில பொது செயலாளர் ஜாவித் உசேன் கண்டன உறையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

 

Leave a Reply

Your email address will not be published.