அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் 97-வது பொது மகா சபை கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜினீல் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.. இதில் அகில இந்திய ரயில்வே சம்மேளன தலைவராக கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை கொண்டாடும் விதமாக பொன்மலையில் திருச்சி ரயில்வே ஆர்மேரிகேட் அருகே பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் SRMU சங்கத்தை சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 50 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தென்னிந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் கண்ணையா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.