ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது இந்த ரத யாத்திரையானது திருச்சி அண்ணா சிலை ரவுண்டானா அருகே தொடங்கி காவேரி பாலம் மாம்பழச் சாலை வழியாக சென்று அம்மா மண்டபம் அருகே உள்ள ஸ்ரீரங்கம் இஸ்கானில் நிறைவடைந்தது.

இந்த யாத்திரை சேவைகளாக ஜூலை ஆறாம் தேதி ரத யாத்திரை தொடங்கியது. நாளை ஸ்ரீரங்கம் இஸ்கான் மண்டபத்தில் கீர்த்தனை பஜனை பகவத் கீதை சொற்பொழிவு ஆரத்தி கீர்த்தனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது. மேலும் இன்று நடந்த ஸ்ரீ ஜெகன்னாத் ரத யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் ஸ்ரீ ஜெகன்நாதர் ரதத்தை வடம் பிடித்து இழுத்து ரதத்தின் முன் ஆடவும் பாடவும் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *