அசாமில் முஸ்லிம்களை குறிவைத்து படுகொலை செய்யும் பாஜக அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாலக்கரை ரவுண்டானாவில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முஜீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் இமாம் .ஹஸ்ஸான், பைஜி கலந்து கொண்டு sdpi கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி கண்டன உரையாற்றினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கியத்துவத்தை விளக்கி பாஜக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட செயலாளர் அப்சல் கான் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக மாநகர பகுதி செயலாளர் அப்துல்லாஹ் நன்றியுரையுடன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.