திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (24) இவர் கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொன்மலை போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளான பொன்மலை பொன்னேரி புரம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (24) மேல கல்கண்டார் கோட்டை நாகம்மை வீதியை சேர்ந்த சரத் என்கிற ரத்தினசாமி (21), காஜாமலை பகுதியை சேர்ந்த ஆல்வின் (17) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மறுநாள் பொன்மலை பகுதி முழுவதும் கொலை செய்யப்பட்ட சின்ராஜின் நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினர். அந்த போஸ்டரில் கடைசி வரியில் “விரைவில்” என்ற வார்த்தை பலிக்கு பலி என்பதுபோல சர்ச்சைக்குரிய வகையில் இருந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட 5 வாலிபர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருச்சி பொன்னேரி புரத்தை சேர்ந்த குழந்தை என்பவரின் மகன் பெலிக்ஸ் வயது (25). என்பவர் லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம கும்பல் ஒன்று வழிமறித்த சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் முகம் மற்றும் கைவிரல்கள் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெலிக்ஸியன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த என்பரின் தம்பி என்பது முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அலெக்ஸ் தற்போது சிறையில் உள்ளதால் பழிக்குப்பழியாக அவரது தம்பி பெலிக்ஸ் படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் என தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்த குற்றவாளி குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.