திருச்சியில் அனைத்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் திருச்சி நீர்ப்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சோழசிராமணி பகுதியில் காவிரி ஆற்றில் ராஜவாய்க்கால் பசான பகுதியை பாலைவனமாக்கும் நோக்கோடு 2019ல் வழங்கப்பட்டுள்ள 42 இரவை பாசன திட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், காவிரியில் கீழ் பாசன விவசாயிகள் கருத்து கேட்காமல் புதிய நீர் பாசன திட்டங்களை அனுமதிக்க கூடாது,காவிரி நீரை வணிக நோக்கோடு, தனிநபர் சுயநலத்திற்க்காக ஏக்கர் 1 க்கு ரூ15 லட்சம் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் நோக்கோடு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.ஆர்.பாண்டியன்

 

இப்பிரச்சினை குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இடமும் முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டு தலைமைச் செயலாளரும் இது குறித்த ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளார். எனவே, தமிழக அரசு விரைவில் இந்த 42 இரவை பாசனத் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை விவசாயிகளை நாங்கள் கையில் எடுப்போம்,

கடந்த அதிமுக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தினால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் முழுமையாக பாசன வசதி பெற முடியாமல் பாலைவனமாகும் நிலைக்கு தள்ளப்படும் என்பதால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,

அண்ணாமலை போராட்டத்தால் மேகதாது அணை கட்டப்படாதது என சொல்வது உண்மையானால் அவர் சொல்வது ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். தஞ்சையில் ஒரு போராட்டம் நடத்த துவங்கிய பொழுது கர்நாடகாவில் மேகதாதூடவுக்கு எதிராக போராடிய தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக போராட்டத்தில் அங்கு ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அண்ணாமலை போராட்டத்தால் மேகதாது அணை தடைபடாது. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படும். தமிழர்கள் அகதிகளாக விரட்டு அடிக்கப்படுவார்கள். இதற்கு முழு பொறுப்பு பாரதிய ஜனதா கட்சிதான் எனத் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *