இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில நிர்வாக குழு கிளர்ச்சி பிரச்சார குழு உறுப்பினர் இந்திரஜித் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் சிவா, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார்,
மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள், உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள். இளைஞர். மாணவர், மாதர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.