திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள உப்பாறு தடுப்பணை மேல்புறத்தில் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணியினை மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உப்பாறு உள்ளது . துறையூர் பச்சமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பெய்யும் மழை நீர் உப்பாறாக உருவாகி மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள எதுமலை, தேவிமங்கலம், இருங்களூர், லாவ்குடி பூவாளூர் வழியாக இந்த உப்பாறு நத்தம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கலந்து வீணாகிறது.

இதனை தடுக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2014 ஆண்டில் அப்போதைய மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏவும் அப்போதைய அமைச்சருமான டி.பி. பூனாட்சி முயற்சியால் ரூ. 3.25 கோடி செலவில் மழைநீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் தடுப்பணை கட்டி உப்பாற்றின் கரைகளை உயர்த்தினர். அதன் பிறகு ஆட்சிக்கு அதிமுக அரசும் , அப்போதைய அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி இந்த தடுப்பணை பகுதியில் முள் செடிகள் முளைத்து மரங்களாக வளர்ந்து இருப்பதனை கண்ணுக்குப் புலப்படவில்லை .

  இதனை அறிந்த தற்போதைய மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவன் முயற்சியால் தமிழக அரசின் நீர்வழி துறை சார்பில் ரூபாய் 25 லட்சம் செலவில் இருங்களூர் பகுதியில் உள்ள உப்பாறு தடுப்பணை மேல்புறம் மற்றும் கீழ்ப்புறத்தில் காடு போல வளர்ந்த முள் மரங்கள் உள்ளிட்ட புதர்களை நீர் செல்லும் திறனை மீட்டெடுக்கும் பணியாக இந்த தூர் வாரும் பணி பணியினை மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நீர்வழி துறை உதவி செயற் பொறியாளர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் விவசாயிகள் கிராம பொதுமக்கள் திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *