நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, அதிமுக தேர்தல் அறிக்கை குழு பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ் மஹாலில் நாளை மாலை, திருச்சி மண்டலத்துக்குட்பட்ட, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட, பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை குழு கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.

பல்வேறு சங்கப் பிரதிநிதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், தேர்தல் அறிக்கை குழுவுக்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், ஒலி, ஒளி அமைப்புகள் குறித்தும், வாகன நிறுத்த ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இதில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் MP குமார், வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னேற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்பி ரத்தினவேல், கழக புரட்சித் தலைவி பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, ரோஜர் ஏர்போர்ட் விஜி, கலைவாணன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, பூபதி, ராஜேந்திரன், மீனவரணி அப்பாஸ், பாசறை இலியாஸ், ஐடி விங் வெங்கட் பிரபு, உள்ளிட்ட பலர் பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *