திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் கூட்டம் மற்றும் வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் தில்லைநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தேர்தல் அறிக்கை என்னாச்சு தி .மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீட் தேர்வு ரத்து, கட்டுமான பொருட்களின் விலையை குறைப்பது, பெட்ரோல்- டீசல் விலையை குறைப்பது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்குவது, காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதில் போன்ற வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தலைமை கழகம் அறிவித்தவாறு வருகிற 28-ஆம் தேதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் முன்பு பதாகை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டு*பொய்வழக்கு*

தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பொய் வழக்கால் பாதிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு சட்ட உதவி செய்வதற்கு வக்கீல்கள் குழு அமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு சிறப்பாக தேர்தல் பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது. மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என். ஆர். சிவபதி, அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, முன்னாள் அமைச்சர் அண்ணாவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், வக்கீல் அணி செயலாளர் அன்பு பிரபாகரன், மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நகர, பேரூர் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்