திருச்சியில் அதிமுக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. அதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில், முன்னாள் அமைச்சர் சிவபதி முன்னிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதி கழக, கிளைகழக நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து பணிகள் துவங்கியுள்ளது.இளைஞர்கள் ஆர்வமுடன் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.இந்நிகழ்வில், முன்னாள் எம்.எல்.ஏ க்கள் இந்திராகாந்தி, சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.