அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டை உலகமே வியக்கும் வண்ணம் சிறப்புமிக்க மாநாடாக தலைமையேற்று நடத்தி, வரலாறு படைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இந்த கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்வது.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் பணிகளை விரைவாக தொடங்கி திருச்சி பொன் நகர் வடக்கு மாவட்டத்திற்கு உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி மகளிர் குழு வாசனைக்குழு அமைக்கும் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் திருச்சி பொன் நகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பொற்கால ஆட்சி மீண்டும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்களின் தலைமையில் அமைந்திட பாடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி முருகன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட