அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனியாக கட்சி அலுவலகம் திறந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்கள். பகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பாலக்கரை மற்றும் உறையூர் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஏர்போர்ட் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதற்கு பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு அவை தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை மலைக்கோட்டை பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவது ஓ பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *