தமிழகம் முழுவதும் இன்று 2-வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சிவெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்

 

திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 82ஆயிரத்து 553பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இதுவரை 11 லட்சத்து 73 ஆயிரத்து 735 பேருக்‌கு தற்போது வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் இந்த முகாமில் 55ஆயிரம் பேர் இலக்காக கொண்டு 382 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

மேலும், திருச்சியில் போக்குவரத்தை நெரிசலை தவிர்க்க வகையில் புதிய காவிரி பாலம், உயர்மட்ட பாலம், உய்யகொண்டான் கரையில் உள்ள சாலை அகலப்படுத்துதல் பணி, கோணக்கரை சாலை விரிவாக்கம் பணி என அனைத்து பணிகளுக்குமான திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான நிதிகள் ஒதுக்கிடு செய்து விரைவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். மாநகராட்சியே மாரிஸ் மேம்பால பணிகளை மேற்கொள்விருக்கிறது. உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாலும் 9மாவட்டம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்படும்.

அதனை தொடர்ந்து நகர்புற தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் தொடங்கும்.திமுக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில்ஒற்றுமையாக வெற்றி பெறுவோம். திமுக கூட்டணியில் எந்த வித விரிசலும் இல்லை என தெரிவித்தார். இந்த முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், மணப்பாறை அப்துல்சமது, துறையூர் ஸ்டாலின்குமார், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகர திமுக செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *