கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் ஏழை , எளிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரொனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடிய வருகிறது. கொரொனா பாதிப்பு ஒருபுறம் என்றால் சாலையோரவாசிகளாக வாழக்கூடிய ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர்கள் நிலை மிக கடினமான சூழல் ஆகும். அதுவும் ஊரடங்கு காலங்களில் சாலையோரம் வசிப்பவர்கள் நிலை மிகவும் மோசமானதாகும்.