கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் ஏழை , எளிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரொனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடிய வருகிறது. கொரொனா பாதிப்பு ஒருபுறம் என்றால் சாலையோரவாசிகளாக வாழக்கூடிய ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர்கள் நிலை மிக கடினமான சூழல் ஆகும். அதுவும் ஊரடங்கு காலங்களில் சாலையோரம் வசிப்பவர்கள் நிலை மிகவும் மோசமானதாகும்.

கிடைக்கக் கூடிய உணவை ஜீவனம் நடத்தி வருகிறார்கள் வயது மூப்பு காரணமாக சிலர் உடல்நிலை பாதித்து பொது இடங்களிலேயே இறந்து வருகிறார்கள்.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விபத்துக்கு உள்ளாவதும் உண்டு. சாலையோரம் வசிப்பவர்களுக்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஆகியோர் தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றார்கள். மேலும் சாலையோரவாசிகள், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனாதையாக பொது இடங்களில் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையங்களில் இருந்து வரும் தகவலின் அடிப்படையில் அனாதை பிரேதங்களை அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் தனது சொந்த நிதியிலிருந்து இறுதி நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.
தற்போதைய சூழலில் மாதம் நான்கு அனாதை பிரேதங்கள் வந்து விடுகின்றன. காவல் துறையினர் விசாரணையில் பெயர் விலாசம் தெரியாத அனாதை பிரேதம் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்ட அறிக்கையுடன் சம்மந்தப்பட்ட சரக காவல் உதவி ஆய்வாளர் அல்லது தலைமை காவலர் முன்னிலையில் உடலைப் பெற்று நல்லடக்கம் செய்து மாலை அணிவித்து பால், தயிர் தெளித்து இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்யும் தம்பதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்