திருச்சி லால்குடி சிறுதையூர் பஸ் நிலையம் அருகே அடங்கியிருக்கும் ஹஜ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா அவர்களின் சந்தனக்கூடு உரூஸ் விழா வருஷம் ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதம் பிறை 15 06-05-2023 சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து சமுதாயத்தினரும் இஸ் தளத்திற்கு வருகை தந்து பாத்திஹா மற்றும் நற்காரியங்களில் கலந்து கொண்டு தவறாமல் நன்மை அடையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

 சந்தனக்கூடு ஊர்வலம் லால்குடி மேல வீதி ஆஷர் கானாவில் இருந்து ஆரம்பித்து திருச்சி சிறுதையூர் ரோட்டில் உள்ள தர்காவை அடைந்து ஹஜ்ரத் ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசப்படும். அன்று இரவு தர்காவில்மவுலூது ஷரீஃப் ஓதப்படும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பாக அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

.07-05-23 ஞாயிற்றுக்கிழமை அன்று தர்காவில் விளக்குகளின் அலங்காரம் மற்றும் பாத்திஹா நடைபெறும். 8.5.23 திங்கட்கிழமை பீர்னி பாத்திஹா நடைபெறும். இந்த சந்தனக்கூடு விழாவை லால்குடி முஸ்லிம் தர்மா பரிபாலன ஸ்தாபனம் மற்றும் ஜமாத்தார்கள் ஜாமியா பள்ளிவாசல் மற்றும் தர்கா நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *