தமிழ்நாட்டில் தகுதியுள்ள 35 விழுக்காடு சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் கல்வி உதவி தொகை கிடைக்கப்பெறவில்லை. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாமானிய மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரியை நிறுத்த வேண்டும்.
டீசல் விலை உயர்வு நாட்டிற்க்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும் இது புரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

7 பேர் விடுதலையில் நீதிமன்றமும் அரசும் எடுக்கும் முடிவுக்கு எந்த ஆட்சேபனையும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைவரும் அதனை குறிப்பிட்டுள்ளார். அதிக காலம் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் போது இவர்களை விடுதலை செய்தாலும் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் முதலீடுகள் குறித்தும்,பொதுத்துறை நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதி ஆகியவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அனைவருக்கும் சமத்துவ அடக்க ,தகன மேடைகளை உருவாக்க முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.

பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரியை நீக்கி விட்டு அதனை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரவேண்டும். மேலும்
விமான நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்த்தது பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படுத்தும் .குறிப்பாக ஒருவரிடமே அதிக துறைமுகங்கள், விமான நிலையங்களை கொடுத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றார்.

பாஜக அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர்களாக இருந்தாலும் கட்சித் தலைவராக இருந்தாலும் கண்ணியமாக பேசவேண்டும். குழாயடி சண்டை போல் வார்த்தைகளை விடக்கூடாது என்றார்.

ஆளுநர் துறை அதிகாரிகளிடம் நேரடியாகப் பேசுவது குறித்த பேச்சு கடித விவகாரம் இவைகள் முதல்வருக்கு தெரிந்து நடந்துள்ளதால் அதனை குறித்து எதுவும் பேச வேண்டியதில்லை என்றார்.
குறிப்பாக தமிழக ஆளுநர் செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களும் பாரதிய ஜனதா கட்சியின் அதிகார பேச்சு கேட்டு இருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் நேரடியாக சந்திப்பது தமிழ்நாட்டில் அதற்கு உதாரணம் ஓபிஎஸ், இபிஎஸ், பாஜகவினர் அடிக்கடி ஆளுநரை சந்தித்து வருவது இதை வைத்து குறிப்பிடுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *